தேசியம்
செய்திகள்

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

தனது முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமானது.

Ontario உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (16) ஆரம்பமான சசிகரன் தனபாலசிங்கம் மீதான முதலாம் நிலை கொலை குற்றச்சாட்டு வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் (17) தொடர்ந்து நடைபெற்றது.

2019ஆம் ஆண்டு September மாதம் 11ஆம் திகதி, 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தர்ஷிகா ஜெகநாதனை, வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது கத்தியால் தாக்கி கொலை செய்ததாக சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதனன்று நடைபெற்ற முதலாம் நாள் விசாரணையில் தர்ஷிகா ஜெகநாதனின் நண்பி கருஞ்சா பரமேஸ்வரன், கொலை நிகழ்ந்த இடத்திற்கு சென்ற முதலாவது காவல்துறை அதிகாரி ஆகியோர் சாட்சியமளித்தனர்.

முன்னதான சசிகரன் தனபாலசிங்கம், தனது முன்னாள் மனைவி தர்ஷிகா ஜெகநாதனின் மரணத்திற்கு காரணமானவர் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது என உதவி அரச வழக்கறிஞர் Caolan Moore ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளின் அறிக்கையை வாசித்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Related posts

உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Vancouver விமான நிலையத்திற்கு அருகில் தமிழர் சடலம் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

Leave a Comment