தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்டத்தினால் கனடிய பொருளாதாரத்திற்கு பல பில்லியன் டொலர்கள் நஷ்டம்

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தினால் கனடிய பொருளாதாரத்திற்கு பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் எல்லை முற்றுகைகள் காரணமாக 3.9 பில்லியன் டொலர் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக கனடிய போக்குவரத்து சபை மதிப்பிடுகிறது.

எல்லை முற்றுகைகளால் விரக்தியடைந்த வணிக நிறுவனங்களிடம் பல மத்திய அமைச்சர்களின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை பொது ஒழுங்கு அவசர ஆணையம் மதிப்பாய்வு செய்தது.

February மாதம் 14ஆம் திகதி அவசரகால பிரகடனத்தை அறிவித்த பிரதமர் Justin Trudeau முற்றுகைகளினால் ஏற்றபடும் பொருளாதார தாக்கம் குறித்து குறிப்பிட்டார்.

இந்த முடிவுக்கு முன்னதாக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி ஆலைகளை மூடுவது குறித்து போக்குவரத்து அமைச்சர் Omar Alghabraவின் அலுவலகத்திற்கு கவலை தெரிவித்ததாக மின்னஞ்சல்கள் காட்டுகின்றன.

Related posts

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தொற்றுக்களின் எண்ணிக்கையில் குறைந்த விகிதங்களை கனடா காண்கிறது

Gaya Raja

புதிய தலைவருக்கு Conservative உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment