Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினராக தெரிவான ஜுவானிடா நாதன் பதவி ஏற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற பதவி ஏற்பு வைபவத்தில் திருக்குறள் மீது சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜுவானிடா நாதன் தனது பதவியை ஏற்றுள்ளார்.
York பிராந்தியத்தின் முன்னாள் கல்விச்சபை உறுப்பினரான ஜுவானிடா நாதன், இம்முறை Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அவர் மொத்தம் 5,388 வாக்குகளை பெற்றிருந்தார்.
இதன் மூலம் Markham நகரின் ஏழாவது வட்டாரத்திற்கு மீண்டும் தமிழ் நகரசபை உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.