December 12, 2024
தேசியம்
செய்திகள்

200 நாட்களுக்கு மேல் Dominican குடியரசில் தடுத்து வைக்கப்பட்ட கனடியர்கள் நாடு திரும்புகின்றனர்

கடந்த இலை துளிர் காலத்தில் இருந்து Dominican குடியரசில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 கனடியர்கள் மீண்டும் கனடா திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Pivot Airlines கனடிய விமானக் குழுவும் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை (11) மீண்டும் கனடா திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து விமானக் குழு உறுப்பினர்கள், ஏழு பயணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, Pivot Airlines விமானத்தின் பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஆனாலும் தங்கள் விமானத்தில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதை விமான குழுவினர் தாங்களாகவே அதிகாரிகளிடம் புகாரளித்ததாக Pivot Airlines கூறியுள்ளது.

இந்த நிலையில் Dominican குடியரசில் 220 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தமது குழுவினர் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதை Pivot Airlines தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தினார்.

Related posts

முடிவுக்கு வரும் Ottawa நகரின் அவசரகால நிலை!

Gaya Raja

பசுமைக் கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

Lankathas Pathmanathan

Leave a Comment