December 12, 2024
தேசியம்
செய்திகள்

CUPE உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாளர் வாரிய வழக்கு மீளப்பெறப்பட்டது

CUPE உறுப்பினர்களின் வெளிநடப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய தொழிலாளர் வாரிய வழக்கு Ontario அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டது.

55 ஆயிரம் கல்வி ஊழியர்களின் வெளிநடப்புச் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கப்பட்ட விண்ணப்பத்தை Ontario மாகாண அரசாங்கம் திரும்பப் பெற்றதாக Ontarioவின் தொழிலாளர் உறவுகள் வாரியம் கூறுகிறது.

தமது விண்ணப்பத்தை மீளப் பெறுவதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தம்மிடம் புதன்கிழமை (09) தெரிவித்ததாகவும், CUPE இன் சட்ட ஆலோசகர் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் Ontario தொழிலாளர் உறவுகள் வாரியம் கூறுகிறது.

Bill 28 என்னும் மசோதா மூலம் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டத்தை Ontario அரசாங்கம் இயற்றியதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (04) கனடிய பொது ஊழியர் சங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வேலையை விட்டு வெளியேறினர்.

இதனால் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தங்கள் வேலை மறுப்பு நடவடிக்கையை முடித்துக் கொண்டால், Bill 28 சட்டத்தை இரத்து செய்வதாக திங்கட்கிழமை (07) முதல்வர் Doug Ford, உறுதியளித்தார்.

இந்த நிலையில் CUPE ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (08) தமது வேலை மறுப்பு நடவடிக்கையை முடித்து கொண்டனர்.

அதேவேளை Bill 28 மசோதாவை இரத்து செய்வதற்கான புதிய சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படும் என முதல்வரின் பேச்சாளர் வெள்ளிக்கிழமை (11) கூறினார்.

Related posts

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Nova Scotiaவில் அவசர நிலை

Lankathas Pathmanathan

மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் கனடிய மத்திய வங்கி?

Lankathas Pathmanathan

Leave a Comment