தேசியம்
செய்திகள்

ISIS  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுவன் கனடாவில் குடும்பத்துடன் இணைந்தார்

ISIS  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுவன் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் Winnipegகில் தனது குடும்பத்துடன் இணைந்தார்.

ISIS  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் Ayad Alhussein தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை மீண்டும் இணைந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இவர் ஐந்து வருடங்கள் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் ISIS பிடியில் இருந்து தப்பி திருந்தார்.

பின்னர் ஈராக்கில் உள்ள இடம்பெயர்ந்தோர் அகதிகள் முகாமில் மூன்று வருடங்கள் தங்கியிருந்த அவர் கனடாவில் வாழும் அவரது இரண்டு சகோதரிகளுடன் இணைந்துள்ளார்.

கனடிய அரசாங்கம் 2017ஆம் ஆண்டு ஆரம்பித்த Yazidi அகதிகள் திட்டத்தின் கீழ் இவரது இரண்டு சகோதரிகளும் கனடாவுக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் இளைஞர் கொலை குற்றவாளி பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

சீன அதிபர் கனடிய பிரதமர் மீது குற்றச் சாட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment