அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ஒப்பீட்டளவில் மாறாமல் இருக்கும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
அமெரிக்க குடிமக்கள் இடைக்காலத் தேர்தலில் செவ்வாக்கிழமை (08) வாக்களித்தனர்.
இந்த தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் கனேடியர்களுக்கு முக்கியமான விடயங்களில் அமெரிக்க காங்கிரஸுடனும், அமெரிக்க அரசாங்கத்துடனும் கனடா தொடர்ந்து பணியாற்றும் என அவர் கூறினார்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் நட்பும் உறுதியும் தொடரும் என Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.