February 22, 2025
தேசியம்
செய்திகள்

Quebec மாகாண Liberal கட்சியின் தலைவர் பதவி விலகல்

Quebec மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Dominique Anglade விலகியுள்ளார்.

ஒரு பெரிய Quebec அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கிய முதல் கறுப்பின பெண்ணன இவர், தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக திங்கட்கிழமை (07) அறிவித்தார்.

அவரது கட்சி மாகாணத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது ஐந்து வாரங்கள் கடந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

December 1ஆம் திகதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்

Quebecகின் நலன்களையும், கட்சியின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுப்பதாக Anglade தெரிவித்தார்.

Related posts

வைத்தியசாலை பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் NDP தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை Fiona ஏற்படுத்தும்

Lankathas Pathmanathan

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment