தேசியம்
செய்திகள்

2,200 GO Transit தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்!

சுமார் 2,200 GO Transit தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Metrolinx உடன் புதிய ஒப்பந்த இணக்கத்தைப் பெற இயலவில்லை என ஞாயிற்றுக்கிழமை (06) ஒரு அறிக்கையை Amalgamated Transit Union Local 1587 வெளியிட்டது.

இதன் காரணமாக தெற்கு Ontarioவின் பெரும்பகுதி முழுவதும் உள்ள பயணிகள் மாற்றுப் போக்குவரத்திற்கான வழிகளை தேட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

பேருந்து நடத்துநர்கள், நிலையப் பணியாளர்கள், இதர ஊழியர்களை உள்ளடக்கிய வேலை நிறுத்தப் போராட்டம் திங்கட்கிழமை (07) நள்ளிரவு 12:01 மணிக்கு ஆரம்பமானது.

தொழிற்சங்கம் வார இறுதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி, திங்களன்று மீண்டும் பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கான கோரிக்கையை நிராகரித்தது என Metrolinx ஒரு அறிக்கையை வெளியிட்டது.

Ontario கல்வி ஆதரவாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமது வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில் O Transit தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பமாகியுள்ளது.

 

Related posts

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan

$6.5 மில்லியன் Cocaine கடத்திய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Brampton நபர்

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் குறையும் எரிபொருளின் விலை

Leave a Comment