தேசியம்
செய்திகள்

ஐந்து வருட காலத்திற்குள் 252 பாடசாலை ஊழியர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு

ஐந்து வருட காலத்திற்குள் 252 பாடசாலை ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் இயல்பின் குற்றங்களைச் செய்ததாக அல்லது குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

548 குழந்தைகளுக்கு எதிராக இந்த 252 பாடசாலை ஊழியர்கள் ஐந்து வருட காலத்திற்குள் பாலியல் இயல்பின் குற்றங்களைச் செய்ததாக அல்லது குற்றம் சாட்டப்பட்டதாக தெரியவருகிறது.

கனேடிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

2017 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் மேலும் 38 பணியாளர்கள் சிறுவர் ஆபாசப் படங்கள் தொடர்பான குற்றங்களுக்காக குற்றவியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் சிறுமிகள் எனவும், 29 சதவீதம் பேர் ஆண் குழந்தைகள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Related posts

Montreal தீ விபத்தில் 6 பேரை காணவில்லை!

Lankathas Pathmanathan

Quebec காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தி கொலை

Lankathas Pathmanathan

ஆரம்பமானது அமெரிக்க அதிபரின் முதலாவது கனடிய பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment