February 22, 2025
தேசியம்
செய்திகள்

சட்ட மன்றத்திலிருந்து NDP உறுப்பினர்கள் வெளியேற்றம்

Ontario NDP மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் புதன்கிழமை (02) சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

புதனன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, Ontario புதிய ஜனநாயகக் கட்சியின் பதினாறு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.

கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதைத் தடுக்கும் Ontario மாகாண அரசாங்கத்தின் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில் NDP மாகாணசபை உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அரசாங்கம் பொதுமக்களிடம் பொய் கூறுவதாக புதிய ஜனநாயகக் கட்சியின் இடைக்காலத் தலைவர் Peter Tabuns குற்றம் சாட்டினார்

அவர் மன்னிப்பு கோரவோ அல்லது தனது கருத்துகளை இரத்து செய்யவோ மறுத்தபோது மாகாணசபையில் இருந்து வெளியேறுமாறு கோரப்பட்டார்

இதன் போது ஏனைய NDP மாகாணசபை உறுப்பினர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவர்கள் ஒவ்வொருவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் புதன் முழுவதும் மீண்டும் சட்டமன்றத்திற்கு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டது.

கல்வித் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட வியாழக்கிழமைக்கு முன்னதாக இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவதாக கல்வி அமைச்சர் Stephen Lecce கூறினார்.

Related posts

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Gaya Raja

Richmond Hill இந்து ஆலய தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர்

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை தங்கள் கடிகாரங்களை முன்னோக்கி நகர்த்துகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment