Ontario அரசாங்கத்தின் மீண்டும் வேலைக்கு திரும்பும் சட்டத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தொழிலாளர் அமைச்சகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை (01) மாலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கனடிய பொது ஊழியர் சங்கத்தின் எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் தடுக்கும் சட்டமூலம் ஒன்றை நேற்று கல்வி அமைச்சர் மாகாண சபையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த சட்டமூலம் தொழிற்சங்கத்தில் பிரதிநிதித்துவ படுத்தப்படும் சுமார் 55 ஆயிரம் உறுப்பினர்கள் மீது புதிய நான்கு ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தை திணிக்கும் வகையில் அமைந்துள்ளது
இந்த வாரம் மாகாண சபையில் விவாதிக்கப்படும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை ஆயிரக்கணக்கான கல்வித் தொழிலாளர்கள் மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்க முதல்வர் Doug Ford எடுத்துள்ள முடிவு குறித்து பிரதமர் Justin Trudeau கேள்வி எழுப்பியுள்ளார்.