உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்குவதில் NATO இராணுவக் கூட்டணியில் கனடா முன்னணியில் இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ரஷ்யாவுடனான போர் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான இராணுவ உதவியை கனடா வழங்கியுள்ளது.
தொடர்ந்தும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மூலம் கனடா உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
கனடாவின் கவச-வாகன உற்பத்தி குறித்து உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர், NATO பொதுச் செயலாளர் ஆகியோருடன் உரையாடியதாக ஆனந்த் கூறினார்.