Montreal மருத்துவ மனைகளின் அவசர பிரிவில் எதிர்கொள்ளப்படும் நெரிசலை நிர்வகிப்பதற்கு நெருக்கடி மேலாண்மை குழுவை Quebec அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் Christian Dubé மாகாண சட்டமன்றத்தில் புதன்கிழமை (26) இதனை அறிவித்தார்.
மருத்துவ மனைகளின் தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் கூறினார்.
Montreal நகரத்தில் உள்ள 21 மருத்துவமனைகளில் 17 மருத்துவமனைகள் 100 சதவீதத்திற்கு மேல் நெருக்கடி நிலையில் செயல்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.