கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள் என புதிய கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது.
புதன்கிழமை (26) வெளியான 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியானது.
2041ஆம் ஆண்டிற்குள் கனடாவில் மூன்றில் ஒரு பங்கை புதிய குடிவரவாளர்கள் பிரதிநிதித்துவ படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 8.3 மில்லியனுக்கும் அதிகமான புதிய குடிவரவாளர்கள் உள்ளனர்.
கனடாவிற்கு புலம்பெயர்ந்த ஐந்தில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர் எனவும் இந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
சமீபத்தில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.