February 23, 2025
தேசியம்
செய்திகள்

Scarborough வடக்கு நகரசபை உறுப்பினர் மரணம்

Scarborough வடக்கு தொகுதியின் நகரசபை உறுப்பினர் Cynthia Lai மரணமடைந்தார்.

அடுத்த தேர்தலில் மீண்டும் நகரசபை உறுப்பினர் உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் அவரது மரணத்தை தேர்தல் பிரச்சார மேலாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (21) மதியம் அவர் மரணமடைந்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2018 இல் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட Lai, எதிர்வரும் திங்கட்கிழமை (24) நடைபெறும் நகரசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் மேலும் 3 வேட்பாளர்கள் Scarborough வடக்கு தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

Toronto நகர முதல்வர் John Tory உட்பட ஏனைய நகரசபை உறுப்பினர்கள் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related posts

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலக முன்னாள் Liberal அமைச்சர் முடிவு

Lankathas Pathmanathan

மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவது பாதுகாப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Leave a Comment