உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்த கருத்துக்கு Alberta முதல்வர் Danielle Smith மன்னிப்பு கோரினார்.
ஐக்கிய Conservative கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாக புதிய முதல்வர் கூறினார்.
செவ்வாய்கிழமை (18) மாலை ஒரு அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இந்த விடயம் குறித்த தனது அறிவும் கருத்தும் அந்த நேரத்தில் இருந்து மாறியுள்ளதாக கூறிய முதல்வர் Smith, முந்தைய கருத்துக்களுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.