ரஷ்ய நிறுவனங்கள் பலவற்றை கனடா தடை செய்கிறது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ரஷ்ய நிறுவனங்கள் மீது மேலும் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார்.
இந்த புதிய தடைகள் 34 பேருக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் பொருந்துகிறது
ரஷ்யாவின் தவறான தகவல்களுக்கு காரணமானவர்களை கனடா குறிவைப்பதாக அமைச்சர் Joly தெரிவித்தார்.
உக்ரைனில் யுத்தம் ஒன்பது மாதத்தை நெருங்கும் நிலையில் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
திங்கட்கிழமை (17) பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் உக்ரைனின் சில பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிகளை நியாயப்படுத்த முயற்சித்தாக அமைச்சர் கூறினார்.