தேசியம்
செய்திகள்

Conservative கட்சி விமர்சகர்கள் பதவியில் மாற்றங்கள்

Conservative கட்சியின் விமர்சகர்கள் பதவியில் கட்சி தலைவர் Pierre Poilievre புதன்கிழமை (12) மாற்றங்களை அறிவித்துள்ளார்.

118 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களில் 71 பேர் விமர்சகர் அல்லது துணை விமர்சகர் பதவிகளை பெற்றுள்ளனர்

இவர்களில் இரண்டு முன்னாள் தலைமை போட்டியாளர்களும் அடங்குகின்றனர்.

Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான Scott Aitchison, Leslyn Lewis ஆகிய முன்னாள் தலைமை போட்டியாளர்கள் விமர்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Aitchison வீட்டு வசதி திட்ட விமர்சகராகவும், Lewis உள்கட்டமைப்பு விமர்சகராகவும் செயல்படவுள்ளனர்.

Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Jasraj Singh Hallan, கட்சியின் நிதி விமர்சகராக பொறுப்பேற்கிறார்.

கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Tooleக்கு விமர்சகர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தடையாக இருக்காது: கனடிய தேர்தல் திணைக்களம் உறுதி

Gaya Raja

வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்படும் வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தனிமை சட்டத்தை மீறிய 77 கனடியர்கள் அபராதம் பெற்றனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment