December 12, 2024
தேசியம்
செய்திகள்

Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு அழைப்பு

Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு Prince Edward தீவில் எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Atlantic கனடாவை புயல் தாக்கி மூன்று வாரங்கள் அண்மிக்கும் நிலையில் Prince Edward தீவில் 1,443 வாடிக்கையாளர்கள் புதன்கிழமை (12) மதியம் 2 மணி வரை மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

செவ்வாய் மாலை இந்த எண்ணிக்கை 3,149 வாடிக்கையாளர்களாக இருந்தது.

260 க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பாக மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சில வாடிக்கையாளர்கள் வெள்ளிக்கிழமை வரை தங்கள் மின்சாரத்தை மீளப் பெற மாட்டார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் Prince Edward தீவின் பசுமைக் கட்சி, மாகாணத்தின் பதில் நடவடிக்கை குறித்த பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது.

மாகாணத்தின் பதில் நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு அமைப்புகளிடம் இருந்து இந்த விசாரணையில் தகவல் கோரப்படவுள்ளது.

Related posts

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

Lankathas Pathmanathan

$48 மில்லியன் வெற்றி பெற்ற பல்கலைக்கழக மாணவி

Lankathas Pathmanathan

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment