தேசியம்
செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கான பணி கட்டு்ப்பாட்டை விலத்தும் அரசாங்கம்

சர்வதேச மாணவர்கள் அதிக நேரம் வேலை செய்ய கனடிய அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்குகின்றது

தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், சர்வதேச மாணவர்களை வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அரசாங்கம் தற்காலிகமாக அனுமதிக்கும் என வெள்ளிக்கிழமை (07) அறிவிக்கப்பட்டது.

November 15 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம் 2023 இறுதி வரை அமுலில் இருக்கும் என குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார்.

இந்த மாற்றம் COVID தொற்றுக்கு பின்னரான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளை மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு மில்லியன் வேலை வெற்றிடங்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மாணவர்கள் தங்கள் கல்வி அனுமதிகளை நீட்டிக்க விண்ணப்ப செயல்முறையை தானியக்கமாக்க உதவும் ஒரு திட்டத்தையும் அமைச்சர் Fraser அறிவித்தார்.

இந்த புதிய செயல்முறை சில விண்ணப்பங்களை தானாக அங்கீகரிக்க அனுமதிக்கும்.

ஆனாலும் இந்த செயல்முறை தானாகவே விண்ணப்பங்களை நிராகரிக்காது என கூறப்படுகிறது

இந்த விண்ணப்ப செயல்முறை குடியேற்றப் பின்னடைவை குறைக்கும் என அமைச்சர் கூறினார்.

Related posts

பண மோசடி விசாரணைக் குழுவினால் கனடாவில் குற்றச் சாட்டப்பட்டுள்ள தமிழர்

Lankathas Pathmanathan

Yellowknife நகருக்கு படிப்படியான வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள்

Lankathas Pathmanathan

NDP நாடாளுமன்ற குழு சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment