கனடாவில் எரிபொருளின் விலை மேலும் உயரலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் OPEC கூட்டமைப்பு, எண்ணெய் உற்பத்தியை கடுமையாகக் குறைக்க புதன்கிழமை (05) முடிவு செய்தது.
ஏற்கனவே Thanksgiving நீண்ட வார இறுதிக்கு முன்னதாக கனடாவில் எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
OPECஇன் முடிவின் காரணமாக எரிபொருளின் விலை மேலும் தாக்கத்தை உணரலாம் என எதிர்வு கூறப்படுகிறது
புதனன்று British Columbia மாகாணத்தில் சராசரி எரிபொருளின் விலை 220.2 சதமாக இருந்தது.
Ontario மாகாணத்தில் புதன்கிழமை சராசரி எரிபொருளின் விலை 152 சதமாக இருந்தது.