வடக்கு Nova Scotiaவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Prince Edward தீவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாத நிலையில் உள்ளனர்.
Fiona புயல் Atlantic மாகாணங்களை தாக்கி 12 தினங்கள் கடந்துள்ள நிலையில், Nova Scotia, Prince Edward தீவு ஆகிய மாகாணங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.
மறுசீரமைப்பு முயற்சிகள் தொடரும் நிலையில் வடக்கு Nova Scotiaவில் உள்ள பல மாவட்டங்களில் அவசர கால நிலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை (05) மதியம் 2 மணிவரை Nova Scotiaவில் 2,195 மின் செயலிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் 7,045 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Prince Edward தீவில், 8,723 வாடிக்கையாளர்கள் புதன்கிழமை பிற்பகல் வரை மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.
Fiano புயல் காரணமாக காப்பீடு செய்யப்படாத சேதங்களை ஈடுசெய்ய 300 மில்லியன் டொலர் மீட்பு நிதியை செவ்வாய்க்கிழமை (04) பிரதமர் Justin Trudeau அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.