September 7, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Ontarioவின் குறைந்தபட்ச ஊதியம் இந்த வார இறுதியில் அதிகரிக்கிறது.

October 1 முதல், மாகாண குறைந்தபட்ச ஊதியம் 50 சதத்தினால் அதிகரித்து ஒரு மணிநேரத்திற்கு $15.50 ஆக இருக்கும்.

இந்த 50 சத உயர்வை முதலில் Ontario தொழிலாளர் அமைச்சர் Monte McNaughton கடந்த April மாதம் அறிவித்திருந்தார்.

January 2019 இல் $15.00 ஆக உயர்த்த திட்டமிடப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வை 2018 ஆம் ஆண்டில், முதல்வர் Doug Ford இரத்து செய்திருந்தார்.

அதற்கு பதிலாக, மாகாணம் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 35 சதங்களாக அதிகரித்து $14.35 ஆக்கியது.

பின்னர், January 2022 இல், ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் $15.00 ஆக உயர்த்தப்பட்டது.

October 1 முதல் மாணவர்களின் ஊதியம் 50 சதத்தினால் உயர்த்தப்படும்.

இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு $14.10 ஆக உள்ள குறைந்தபட்ச ஊதியம் $14.60 ஆகிறது.

குறைந்தபட்ச ஊதியம் October 1 ஆம் திகதி ஆண்டுதோறும் அதிகரிக்கும் என மாகாணம் தெரிவிக்கிறது.

Related posts

கனேடிய வங்கிகள் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்கு திறந்திருக்கும்

Lankathas Pathmanathan

Manitobaவில் புதிய பொது சுகாதார உத்தரவுகள்

Gaya Raja

வாக்குறுதியளிக்கப்பட்ட 38 பில்லியன் டொலர்களை செலவழிக்க அரசாங்க துறைகள் தவறிவிட்டன

Lankathas Pathmanathan

Leave a Comment