தேசியம்
செய்திகள்

வெறுப்பு குற்றங்கள் குறித்து கனடாவில் உள்ள குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

வெறுப்புக் குற்றங்கள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கனடாவில் உள்ள தனது குடிமக்களை இந்தியா எச்சரித்துள்ளது.

கனடாவில் வெறுக்கத்தக்க குற்றங்கள், மதவெறி வன்முறைகள், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து இந்திய குடிமக்கள், கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்து கனடிய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் இவை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி உள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (23) வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

கனடாவில் உள்ள இந்திய பிரஜைகள் மாணவர்கள் அவசர காலங்களில் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள Ottawaவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், Toronto அல்லது Vancouver நகரங்களில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பதிவு செய்ய அமைச்சகம் பரிந்துரைக்கிறது.

Related posts

தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து சாட்சியமளித்த பிரதமர்

Lankathas Pathmanathan

February மாதத்தின் பின் கனடா வந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு தொற்று!

Gaya Raja

Leave a Comment