விரைவில் எதிர்பார்க்கப்படும் COVID விதிகள் மாற்றம் குறித்து அமைச்சர்கள் கருத்து கூற மறுத்துள்ளனர்.
COVID தடுப்பூசி எல்லைக் கட்டுப்பாடுகளை இந்த மாத இறுதியில் கைவிட கனடா தீர்மானித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (20) தகவல் வெளியானது.
இது குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது
ஆனாலும் இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், நிலையை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra புதன்கிழமை (21) கூறினார்.
ArriveCan செயலி ஒரு முக்கியமான கருவியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை இந்த நடவடிக்கைகள் எப்போதும் சான்றுகள், தொற்றுநோயியல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறினார்.
தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் September 30 வரை அமுலில் இருக்கும் என்று June மாத இறுதியில் அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.