தேசியம்
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் இறுதிச் சடங்குகள்

கடந்த வாரம் Mississauga நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (21) நடைபெற்றது.

Constable Andrew Hongகின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

48 வயதான Hong, அவரது குடும்பத்தினர், நண்பர்களால் நினைவு கூறப்பட்டார்.

Toronto காவல்துறைத் தலைவர் James Ramer, Ontario முதல்வர் Doug Ford உட்பட பலரும் இறுதி நிகழ்வில் நினைவு உரை நிகழ்த்தினர்.

இந்த இறுதி நிகழ்வில் Toronto நகர முதல்வர் John Tory, Lieutenant Governor Elizabeth Dowdeswell, அவசரகால தயார் நிலை அமைச்சர் Bill Blair, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino உட்பட அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இறுதி ஊர்வலத்தில் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாதம் 12ஆம் திகதி துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் காவல்துறை அதிகாரி Hongஉம் ஒருவராவார்.

Related posts

குறுகிய வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பின்னர் COVID சோதனைகள் தேவையில்லை!

Lankathas Pathmanathan

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல: Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment