Fiona சூறாவளியின் சாத்தியமான தாக்கங்களுக்கு Maritimes குடியிருப்பாளர்களும் அவசரகால அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர்.
Nova Scotia, New Brunswick, Prince Edward தீவின் அவசர நடவடிக்கைகள் அமைப்புகள் வெவ்வேறு தயார் நிலை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
அவசரகால அதிகாரிகள் சாத்தியமான சேதம், வெள்ளம், மின்சார தடைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
இந்த வார இறுதியில் Fiona சூறாவளியின் வருகை எதிர்வு கூறப்படுகிறது.
ஆனாலும் வெள்ளிக்கிழமை (23) முதல் சூறாவளியால் சில தாக்கங்களை எதிர்பார்க்கலாம் என அவசர நடவடிக்கைகள் அமைப்பு கூறுகிறது.