Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின் தூதரக மைதானத்தின் மீது தீக்குளிக்கும் சாதனம் ஒன்று வீசப்பட்டதை காட்டும் ஒளி காட்சிகளை ரஷ்ய தூதரகம் வெளியிட்டது.
இது ஒரு பயங்கரவாத செயல் முயற்சி என்பது எங்கள் மதிப்பீடாகும் என இந்த சம்பவம் குறித்து தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது.
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு கனடாவின் தூதரை வரவழைத்து இந்த சம்பவம் குறித்த காவல்துறையின் பதில் நடவடிக்கை குறித்த தனது விரக்தியை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த தகவல்களை பெற தமது உறுப்பினர்கள் சிலர் ரஷ்ய தூதரகத்திற்கு சென்றுள்ளனர் என செவ்வாய்க்கிழமை (20) RCMP தெரிவித்தது.