Markham நகரில் காவல்துறை அதிகாரி மரணமடைந்த விபத்தில் ஒருவர் போதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை (14) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 38 வயதான York பிராந்திய காவல்துறை அதிகாரி Const. Travis Gillespie மரணமடைந்தார்.
இதில் காயமடைந்த இரண்டாவது வாகன சாரதியான ஆண், காவல்துறைனரால் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (16) Peel காவல்துறையினர் 23 வயதான இவர் மீது போதையில் வாகனம் ஓட்டியது உட்பட குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.
இதில் மூன்றாவது வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதை Peel பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
ஆனாலும் அந்த சாரதி மீது குற்றம் சாட்டப்படவில்லை.
York பிராந்திய காவல்துறையினரின் கோரிக்கையில் Peel பிராந்திய காவல்துறையினர் இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.