தேசியம்
செய்திகள்

கனேடிய வங்கிகள் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்கு திறந்திருக்கும்

கனேடிய வங்கிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக திங்கட்கிழமையன்று வங்கிகள் ஒரு நிமிட மௌனம் கடைப்பிடிக்கும் என அறிவித்துள்ள கனடிய வங்கியாளர்கள் சங்கம், வங்கிகள் சாதாரண வணிகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை சட்டப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்படுவதை வணிகக் குழுக்கள் தொடர்ந்தும் எதிர்க்கின்றன.

திங்கட்கிழமை துக்க நாளாக இருக்கும், ஆனால் அது மாகாண விடுமுறை அல்ல என Quebec, Ontario, Saskatchewan, Alberta ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் மாகாண விடுமுறைகள் Nova Scotia, New Brunswick Prince Edward Island, British Columbia, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

Manitoba அத்தியாவசியமற்ற அரசு சேவைகள், அலுவலகங்களை மட்டுமே மூடவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக பிரதமரின் அறிக்கை வெளியான சில மணி நேரத்தில், அந்த தினத்தை விடுமுறையாக மாற்ற வேண்டாம் என மாகாண அரசாங்கங்களை வலியுறுத்தும் அறிக்கையை கனேடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வெளியிட்டது.

Related posts

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan

மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள்: British Colombia

Lankathas Pathmanathan

Leave a Comment