December 12, 2024
தேசியம்
செய்திகள்

September 19 கனடாவில் தேசிய விடுமுறையாக அறிவிப்பு

கனடிய அரசாங்கத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கு நடைபெறும் September 19ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார்

இந்த விடயத்தில் மாகாணங்களுடனும் பிரதேசங்களுடனும் இணைந்து பணியாற்றுவோம் என இன்று New Brunswick மாகாணத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் Trudeau கூறினார்.

ஒவ்வொரு மாகாணமும் அந்த நாளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் Trudeau கூறினார்.

இந்த விடுமுறை அறிவித்தல் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan தெளிவுபடுத்தினார்.

இந்த தினத்தை Ontario மாகாணம் துக்க நாளாக குறிக்கும் என அறிவித்த மாகாண முதல்வர் Doug Ford, இது மாகாணத்தின் சட்டப்பூர்வ விடுமுறையாக இருக்காது என கூறினார்

இந்த நாள் நினைவு கூரப்படும் போது, அது மாகாணத்தில் சட்டரீதியான விடுமுறையாக இருக்காது என Quebec முதல்வர் François Legault கூறினார்.

Nova Scotia, New Brunswick, Newfoundland and Labrador, Prince Edward Island ஆகிய மாகாணங்கள் இந்த தினத்தை துக்க தினமாக அறிவித்து மாகாண விடுமுறையாக அனுசரிக்கிறது

அதேவேளை இந்த தினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என கனேடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு மாகாணங்களை வலியுறுத்தியது.

இது போன்ற குறுகிய காலத்தில் இவ்வாறு அறிவிப்பது சிறு வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கனேடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான புதிய COVID தடுப்பூசி கொள்கை இந்த வாரம் வெளியாகிறது!

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser தெரிவு

Lankathas Pathmanathan

உக்ரைன் போரில் பங்கேற்ற கனேடியர் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment