கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) அதன் முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூலம் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரிக்கிறது.
வட்டி விகிதங்களை முக்கால் சதவீதம் மத்திய வங்கி உயர்த்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கத்துடன் வங்கி தொடர்ந்து போராடி வரும் நிலையில் வட்டி விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை நிகழும் உயர்வு சிறிது காலத்திற்கு கடைசியானதாக இருக்கலாம் என சில பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.