தேசியம்
செய்திகள்

Saskatchewan கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் மரணம் – 15 பேர் காயம்!

Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் இறந்துள்ளனர், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

James Smith Cree Nation, Weldon ஆகிய இடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக Saskatchewan RCMP தெரிவித்தது.

ஞாயிறு பிற்பகல் நிலவரப்படி, 13 வெவ்வேறு தாக்குதல்கள் சம்பவங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 31 வயதான Damien Sanderson, 30 வயதான Myles Sanderson ஆகியோரை RCMP தேடிவருகிறது.

அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாகவும், Saskatchewan உட்பட அண்டை மாகாணங்களில் வசிப்பவர்களை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என RCMP உதவி ஆணையர் Rhonda Blackmore ஞாயிறு பிற்பகல் Reginaவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை உள்ளடக்கிய ஆபத்தான நபர்கள் குறித்த எச்சரிக்கை Alberta, Manitoba ஆகிய மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

Related posts

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

குடியிருப்பு பாடசாலை மறுப்பைக் குற்றமாகக் கருதும் சட்டமூலம் அறிமுகமானது!

Lankathas Pathmanathan

Leave a Comment