இரண்டாம் காலாண்டில் கனடிய பொருளாதாரம் ஆண்டுக்கு 3.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக கனடிய புள்ளிவிபர திணைக்களம் கூறுகிறது.
வீட்டுச் செலவினங்களில் அதிகரித்த வணிக முதலீட்டால் இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது.
மாதாந்த, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சமீபத்திய அறிக்கைகளை புள்ளிவிபர திணைக்களம் புதன்கிழமை (31) வெளியிட்டது.
இந்த அறிக்கை தொடர்ந்து நான்காவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததைக் காட்டுகிறது.
GDP இரண்டாவது காலாண்டில் 0.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதே நேரம் June மாதத்தில் GDP 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.