பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May இணைந்துள்ளார்.
2019 இல் பசுமைக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய May, கட்சி சீர்குலைந்துள்ளது என கூறினார்.
இந்த நிலையில் பசுமைக் கட்சியின் தலைமையை மீட்டெடுக்கும் முயற்சியை புதன்கிழமை (31) May ஆரம்பித்தார்.
நாடாளுமன்றத்தில் பசுமை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் May ஒருவராவார்.
October, November மாதங்களில் இரண்டு சுற்று வாக்கெடுப்பில் புதிய தலைவரை தேர்வு செய்ய பசுமைக் கட்சி உறுப்பினர் தரவரிசை வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தவுள்ளது.