தேசியம்
செய்திகள்

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்கள் அவசர உதவிக்கு 988 என்ற இலக்கத்தை விரைவில் உபயோகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

2023 இலையுதிர் காலத்தில் இந்த இலக்கம் பாவனைக்கு வரும் என கனடிய வானொலி-தொலைக்காட்சி தொலைத்தொடர்பு ஆணையம் புதன்கிழமை (31) அறிவித்தது.

உடனடி மனநல நெருக்கடி உதவி தேவைப்படும் கனடியர்கள் 988 என்ற இலக்கத்தை அழைத்து அல்லது குறுஞ்செய்தி அனுப்பி ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதில் நினைவில் கொள்ள கூடிய மூன்று இலக்க எண்ணை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மனநலம், தற்கொலை தடுப்பு உதவிகளுக்கான தடைகளை குறைக்க உதவும் என CRTC கூறியது.

Related posts

உக்ரைனில் கனேடிய ஆயுதப் படைகள் போரில் ஈடுபடாது: பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதி

Lankathas Pathmanathan

மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைது

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்களுக்கான பணி கட்டு்ப்பாட்டை விலத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment