December 12, 2024
தேசியம்
செய்திகள்

Modernaவின் Omicron இலக்கு கொண்ட தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Modernaவின் Omicron இலக்கு கொண்ட COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

இதன் மூலம், கனடாவில் முதலாவது மாறுபாடு இலக்கு கொண்ட COVID தடுப்பூசியைப் பயன்படுத்த Health கனடா அங்கீகாரம் அளித்துள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்கலாம் என Health கனடா கூறியுள்ளது.

இந்த அங்கீகாரத்தை கனடாவின் தொற்று பதில் நடவடிக்கையில் ஒரு மைல்கல் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் Modernaவின் Omicron இலக்கு கொண்ட 780 ஆயிரம் COVID தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை (02) கனடாவை வந்தடையும் என சுகாதாா அமைச்சர் Jean-Yves Duclos வியாழக்கிழமை (01) கூறினார்.

September மாத இறுதிக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான மேலும் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை மூடப்பட்டது!

Gaya Raja

Edmontonனில் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் குறிவைத்து கொலை

Lankathas Pathmanathan

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

Leave a Comment