Torontoவில் meningococcal என்ற மூளைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது
July 15 முதல் 17 வரையிலான காலப்பகுதியில் தொற்றின் அறிகுறிகளை இவர்கள் எதிர்கொண்டதாக Toronto பொது சுகாதார பிரிவு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பருவ நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்காத நாடுகளில் பிறந்தவர்கள் என சுகாதார பிரிவு கூறுகிறது.
இதுவரை நோய் தடுப்பூசியை பெறாத 20 முதல் 36 வயதிற்குட்பட்டவர்களை விரைவில் தடுப்பூசியைப் பெற Toronto பொது சுகாதார பிரிவு ஊக்குவிக்கிறது.