Quebec கர்தினால் Marc Ouellet தனக்கெதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும், தனது செயல்களை பாலியல் வன்கொடுமை என விளக்குவது அவதூறானது எனவும் கர்தினால் Ouellet கூறினார்.
தான் குற்றமற்றவர் என்பதை அங்கீகரிக்கும் வகையில், பொது விசாரணையில் பங்கேற்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
“F.” என மாத்திரம் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
ஆனாலும் Ouelletக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.