Vaughan நகர முதல்வர் பதவிக்கு Steven Del Duca போட்டியிடுகிறார்.
Ontario மாகாணத்தின் Liberal கட்சியின் முன்னாள் தலைவர் செவ்வாய்க்கிழமை (16) காலை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Vaughan நகரத்தில் போக்குவரத்து தடையை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவதாக அவர் உறுதியளித்தார்.
Vaughan நகர முதல்வர் Maurizio Bevilacqua தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என June மாதம் அறிவித்தார்.
மாநகர சபை தேர்தல் October மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.