February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 31 ஆயிரம் வேலைகளை இழந்துள்ளது

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 31 ஆயிரம் வேலைகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தது.

இது தொடர்ந்து இரண்டாவது மாத வேலை இழப்புகளைக் குறிக்கிறது.

இந்த நிலையில் கனடாவின் வேலையற்றோர் விகிதம் தொடர்ந்தும் 4.9 சதவீதமாக உள்ளது.

நாடு தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் July மாதத்தின் வேலையற்றோர் விகிதம் June மாதத்தை போலவே 4.9 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை வெற்றிடங்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவு

Lankathas Pathmanathan

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்துள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment