கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு போராட்டக்காரர்கள் திருத்தந்தையிடம் வியாழக்கிழமை (28) வலியுறுத்தியுள்ளனர்.
Quebec நகருக்கு வெளியே வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் வழிபாடு நடத்த ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கனடாவில் உள்ள முதற்குடியினர் மக்களுடன் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் மேலும் செயற்படுமாறு மௌனப் போராட்டம் ஒன்றை போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர்.
“கோட்பாட்டை இரத்து செய்” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை ஏந்தியவாறு அவர்கள் திருத்தந்தை, பிற மத குருமார்கள் முன்னிலையில் மௌனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கனடாவுக்கான தனது பயணத்தின் போது திருத்தந்தை இந்தக் கோட்பாட்டிற்கு எதிராக அதிகம் பேசுவார் என முதற்குடியினர் சமூகங்களின் உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
நல்லிணக்கத்திற்கான பயணம் கடினமானது என இந்தப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக திருத்தந்தை தனது பிராத்தனையில் தெரிவித்தார்.