திருத்தந்தை பிரான்சிஸ் வருகை நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது என முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
திருத்தந்தையின் Alberta மாகாணத்திற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயம் குறித்து முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்
நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட கனடாவுக்கான ஆறு நாள் பயணத்தை பிரான்சிஸ் Albertaவில் ஆரம்பித்தார்.
அங்கு கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
Albertaவில் தங்கியிருந்த காலத்தில் பிரான்சிஸ் ஒரு “உண்மையான தலைவராக” செயல்பட்டதாக கூறும் முதற்குடியினர் தலைவர்கள், அவரது பின்னால் செயல்படுபவர்கள் அவரது நோக்கங்களைத் தொடரத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனாலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரின் மன்னிப்பு நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த ஆரம்பம் என முதற்குடியினர் தலைவர்கள் கூறுகின்றனர்.
புதன், வியாழக்கிழமைகளில் Quebec நகரில் தங்கியிருக்கும் திருத்தந்தை, வெள்ளியன்று தனது கனடிய பயணத்தை Nunavut பிரதேசத்தின் தலைநகர் Iqaluitடில் நிறைவு செய்யவுள்ளார்.