December 12, 2024
தேசியம்
செய்திகள்

வாகனத் திருட்டு குறித்து 28 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

பெரும் வாகனத் திருட்டு நடவடிக்கை ஒன்றை முறியடித்த காவல்துறையினர் 28 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

MYRA என பெயரிடப்பட்ட இந்த முறியடிப்பு நடவடிக்கை Ontario, Saskatchewan மாகாணங்களில் இயங்கி வந்த மூன்று திருட்டு குற்றவியல் அமைப்புகளை அகற்றியுள்ளது.

இதில் திருடப்பட்ட 215 வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை எதிர் கொள்பவர்களில் Service Ontario ஊழியர்களும் அடங்குகின்றனர்.

திருடப்பட்ட வாகனங்களை முறையற்ற வகையில் பதிவு செய்வதற்கு Service Ontario ஊழியர்கள் உதவியதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

இந்த விசாரணை 22 மாதங்கள் தொடர்ந்ததாக Ontario மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் மொத்தம், 240 குற்றச்சாட்டுகளுக்கு மேல் பதிவாகியுள்ளன.

மீட்கப்பட்ட வாகனங்களின் மதிப்பு 12 மில்லியன் டொலர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட வாகனங்களில் 40 சதவீதம் வரை Acura அல்லது Honda வாகனங்கள் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related posts

தனது booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரும் Moderna!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment