Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக Ottawa சட்டமன்ற உறுப்பினர் John Fraser தெரிவாகியுள்ளார்.
கடந்த மாதம் நடந்த மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் தலைவர் பதவியை இராஜினாமா செய்த Steven Del Ducaவுக்குப் பதிலாக Fraser தற்காலிகமாக தலைமை பதவியில் செயல்படவுள்ளார்.
இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் Liberal தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை என Fraser முன்னர் கூறியிருந்தார்.
2018 மாகாணசபை தேர்தலை தொடர்ந்து Kathleen Wynne பதவி விலகிய பின்னரும் Fraser இடைக்கால தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.