February 22, 2025
தேசியம்
செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

2008, 2009 ஆம் ஆண்டுகளில் இலங்கைத்தீவில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஆனந்தசங்கரி கனடிய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கைகளை முன்வைக்கும் செய்தியாளர் சந்திப்பொன்றை புதன்கிழமை (20) மாலை Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தசங்கரி நடத்தினார்.

இலங்கையின் புதிய தலைவராக பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச சகோதரர்கள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என அனந்தசங்கரி குற்றம் சாட்டினார்.

சர்வதேச சட்டத்தை மீறிய ராஜபக்ச சகோதரர்கள் மீது கனடா போன்ற நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கரி ஆனந்தசங்கரி தனது செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் நிலைமைகள் குறித்து தனது கவலைகளை ஆனந்தசங்கரி செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

Related posts

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் Halifax நகரில் 21 பேர் கைது

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தின் முன்பாக கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி

Lankathas Pathmanathan

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் உள்ளது: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment