Conservative கட்சியின் தலைமை பதவிக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார் என Patrick Brown பிரச்சார குழுவின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை(12) தெரிவித்தார்.
Patrick Brown மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படாமல் விட்டால், அவரது ஆதரவாளர்கள் Jean Charest சிறந்த மாற்று என நம்புகிறார்கள் என அவர் கூறினார்.
Brown திங்கள் மாலை தனது ஆதரவாளர்களுடன் ஒரு தொலைபேசி உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.
இந்த உரையாடலில் Brown ஆதரவாளர்கள் மத்தியில் Charestக்கு பெரும் ஆதரவு இருந்ததாக Brown பிரச்சாரத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
ஆனாலும் இது Charestக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலா என்பதை Brown பிரச்சாரத்தின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தவில்லை.
Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது