முதலாவது உலகப் போரில் முழு கறுப்பின கனேடியப் பிரிவுகளும் எதிர்கொண்ட இனவெறிக்கு பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார்.
முழு கறுப்பின கனேடியப் பிரிவுகளும் எதிர்கொண்ட இனவெறிக்கு முறைப்படி மன்னிப்பு கோருவதாக பிரதமர் கூறினார்.
கனடிய தேசபக்தர்களான கறுப்பின கனேடிய இராணுவ உறுப்பினர்கள் நடத்தப்பட்ட கொடூரமான விதத்திற்கு மன்னிப்பு கோருவதாக Trudeau தெரிவித்தார்.
1914ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான கறுப்பினத்தவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் யுத்தங்களில் கனடா சார்பில் சண்டையிட முன்வந்தபோதும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.