December 12, 2024
தேசியம்
செய்திகள்

Brampton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: Patrick Brown

Brampton நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என Patrick Brown தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் கலந்தாலோசிக்கும் வரை இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என Brown கூறினார்.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Brampton நகர முதல்வர் பதவியில் இருந்து விலகாமல், Brown Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்தப் போட்டியில் தன்னால் வெற்றி பெற முடியாது என்ற நிலை தோன்றினால் October மாதம் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக Brown முன்னரே கூறியிருந்தார்.

நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கு August 19ஆம் திகதி வரை அவருக்கு அவகாசம் உள்ளது.

ஆனாலும் Brampton நகரசபையில் முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும் என ஐந்து Brampton நகரசபை உறுப்பினர்கள் அண்மையில் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் கோவிட் காரணமாக பதிவான 10 வயதுக்குட்பட்ட முதலாவது மரணம்!

Gaya Raja

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment